2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆத்திமேடு பிரதேசத்தில், 6ஆம் கட்டைப் பகுதியில், 18 கிராம் கேரளாக் கஞ்சாவுடன் பெண்ணொருவர் உட்பட மூவரை, நேற்று (03) கைதுசெய்ததாக, திருகோணமலை மாவட்டப் பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

தக்வா நகரைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனிடமிருந்து 06 கிராம் கேரளா கஞ்சாவும், ஜமாலியா பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரொருவரிடமிருந்து 05 கிராம் கேரளா கஞ்சாவும், ஆத்திமேடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுப் பெண்ணிடமிருந்து 07 கிராம் கேரளா கஞ்சாவும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நீண்டகாலமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர் என்றும் குறித்த பெண்ணும் ​ஆ​ணொருவரும் இரண்டாவது முறையாக கஞ்சா விற்பனை செய்யும் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், அப்பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும், நிலாவெளிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .