2021 மார்ச் 06, சனிக்கிழமை

கிண்ணியாவில் இன்றும் நால்வருக்கு தொற்று

Princiya Dixci   / 2021 ஜனவரி 11 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று (11) மதியம்  எடுக்கப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மூலம் நான்கு புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் நால்வரும், கிண்ணியா, மாஞ்சோலைச்சேனை, மையவாடிக்கு அருகில் வசித்து வருபவர்கள் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார். 

இதேவேளை,  சுகாதார திணைக்களம் விடுக்கும் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் தொடர்ந்தும் பின்பற்றி நடக்குமாறும் அவற்றை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

தொடர்ந்தும் கிண்ணியா பிரதேசத்தில் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .