தீஷான் அஹமட் / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை – கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 24ஆவது ஆண்டு நினைவேந்தல், குமாரபுரம் கிராம மக்களின் ஏற்பாட்டில், குமாரபுரம் படுகொலை நினைவு தூபியில் நேற்று (11) மாலை நடைபெற்றது.
இதன்போது, குமாரபுரம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் முன்னதாக ஈடுபட்ட உறவினர்கள், உயிரிழந்த தமது உறவுகளுக்கு மலர்தூவி, சுடரேற்றி, அஞ்சலி செலுத்தினர்.
இந்த நினைவேந்தலில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ண சிங்கமும் கலந்துகொண்டார்.
1996.02.11 அன்று இடம்பெற்ற குமாரபுரம் படுகொலையில், 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட 09 பிள்ளைகள், 09 பெண்கள் உட்பட 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 26 பேர் இதில் படுகாயமடைந்தனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago