Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 17 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம் கீத்
திருகோணமலை மாவட்டத்தில் 22 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
இன்று (17) மாலை 4 மணியளவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், கிண்ணியாவில் கடந்த 12 மணித்தியாலயத்தில் புதிய கொரோனா தொற்றாளர் 9 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளதாகவும் இவ்வாரம் அடையாளம் காணப் பட்ட புதிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 48 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று சிவப்பு வலயத்தில் திருகோணமலை மற்றும் கிண்ணியா முன்னிலையில் உள்ளது எனவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் மொத்த கொரோனா தொற்றாளர் 69 பேர் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறிஞ்சாகேணியில் 3 பேர் இனங் காணப்பட்டுள்ள நிலையில் இன்று (17) காலை முதல் மாலை 4.30 மணிவரை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 156 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட நிலையில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், உப்புவெளி சுகாதார பிரிவிலுள்ள பாலையூற்று பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, பிள்ளை ஆகிய மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவன் ஒருவனுக்கு பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கையின் படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சேருவில பிரதேசத்தில் கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago