Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில், 66 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென, திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
இவர்களில் 26 சிறார்களும் கர்ப்பிணியொருவரும் உள்ளடங்குகின்றனரெனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
திருகோணமலை நகர்ப் பகுதியில் அலஸ் தோட்டம், ஆனந்தபுரி, செல்வநாயகபுரம், பாலையூற்று, அன்புவளிபுரம், சீனக்குடா, ஆண்டாங்குளம், உவர்மலை போன்ற பகுதிகளில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 3,683 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரெனவும் டெங்குக் காய்ச்சலால் திருகோணமலையில் மூவர் மரணித்துள்ள நிலையில் மட்டக்களப்பில் இருவரும் அம்பாறையில் ஒருவரும் மரணித்துள்ளனரெனவும் கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஏ. எல்.அலாவுதீன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதுடன் வீடுகள், அரச திணைக்களங்கள், வெற்றுக் காணிகள் போன்றவற்றைச் சோதனையிட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
38 minute ago
48 minute ago
1 hours ago