2021 மார்ச் 06, சனிக்கிழமை

நகரை அழகுபடுத்தல்; வீதியோர வியாபாரங்களுக்கு தடை

Princiya Dixci   / 2021 ஜனவரி 20 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்கள், நகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த நகர சபையின் தவிசாளர் நாகராஜா இராசநாயகம், திருகோணமலை நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், வீதியோரத்தில் நடைபெறும் வியாபாரங்களை நிறுத்தும் வேலைதிட்டம், இன்று (20) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது குறித்த அவர் விவரிக்கையில், “மட்டிக்களி பகுதியில் அமைந்துள்ள மீன் வியாபாரம் காரணமாக அப்பகுதி அசுத்தமடைவதுடன், சுற்றுச்சூழலுக்கும் பாதகமாக அமைவது மட்டுமல்லாது, வீதியோரத்தில் நடைபெறும் வியாபாரத்தால் வீதி விபத்துகளும் வாகன நெரிசலும் ஏற்படுவது ஒரு தொடர்கதையாக அமைகின்றது.

“இவற்றைக் கருத்தில்கொண்டு, வீதியோரத்தில் நடைபெறும் சகல வியாபாரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதேவேளை, தற்சமயம் உள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, அவர்கள் வியாபாரம் செய்வதற்கு  நகர சபைக்குச் சொந்தமான காணிகள் மாற்று  இடங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

“அதாவது, லிங்க நகர் பகுதியில் நகர சபைக்கு சொந்தமான காணி, மின்சார நிலைய வீதியில் நகர சபை வேலை தளத்துக்கு முன்னால் உள்ள மலை அருவி காணி, என்.சி வீதியில் சிறுவர் பூங்காவுக்கு அருகில் உள்ள நகரச பைக்குச் சொந்தமான காணி, அநுராதபுர சந்தியில் அமைந்துள்ள பொதுச் சந்தை காணி ஆகியனவற்றில் வீதியோர வியாபாரம் செய்வதற்கும் அனுமதிக்கப்படும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .