2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பனிக்க வயல் குளத்தின் திருத்தப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை

Thipaan   / 2016 ஜூலை 18 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

திருகோணமலையின் வடக்கு எல்லையான குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனிக்க வயல் குளத்தின் திருத்தப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக, திருகோணமலை மாவட்ட கமநலசேவைகள் உதவி ஆணையாளர் எஸ்.புனிதகுமார், நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்தார்.

மேற்படி குளம், நீண்டகாலத்தின் பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட தென்மரவாடி விசாயிகளின் காணிகளுக்கு நீர்பாயும் குளமாகும். ஆனாலும் அந்தக்குளத்தை புனரமைப்பதில் பிரதேச பிரிவு எல்லைப் பிரச்சனைகள் காணப்பட்டதனால் தாமதம் ஏற்பட்டன.

அந்தப்பிரச்சனைகள் மாவட்டக் கூட்டத்தில் ஆராயப்பட்டதற்கிணங்க, அளவையிடப்பட்டு எல்லை நிர்ணயிக்கப்பட்ட வகையில், இக்குளம் குச்சவெளிப்பிரதேச செயலகத்தின் கீழ் வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இக்குள புனரமைப்பு பணிவிரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

தென்னமரவாடி விவசாயிகள், குறித்த குளம் புனரமைக்கபடாமல் இருப்பதனால் தமது வாழ்வாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல முறை எழுத்து மூலம் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஆணையாளருக்கும் அறிவித்துள்ளனர்.

ஆனாலும் நீண்டகாலம் விவசாயிகள் இடம் பெயர்ந்திருந்த சூழலில், பதவிசிறிபுர பிரதேசத்தை சார்ந்த பல விவசாயிகள் குளத்தை ஆக்கிரமித்து, விவசாய நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.

இதனால்தான் புனரமைப்பு பணியை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதுடன், குறித்த அத்துமீறிய விவசாயிகள் குளத்தை புனரமைக்க எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளன.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .