2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தருக்குக் கொரோனா

Nirosh   / 2020 நவம்பர் 21 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட திஸ்ஸபுர  பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றி வந்த 50 வயதுடைய நபர் இம்மாதம் 2ஆம்  திகதி தம்பலகாமம் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டுக்கு விடுமுறையில் வந்ததாகவும் இதனையடுத்து 4ஆம் திகதி அவரை தனிமை படுத்தியதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட அவரது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரைக்கும் 16 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .