2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மணல் ஏற்றிச் சென்ற நால்வர் கைது

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, கண்டல்காடு  பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி  ஆற்று மணல் ஏற்றிச்சென்ற நால்வரை இன்று (13) அதிகாலை கைது செய்துள்ளதாக  கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை, திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக,   மகாவலி ஆற்றை அண்டிய  பகுதிகளில்   மணல் ஏற்றி வருவதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதால், சட்டவிரோத செயற்பாடுகளில் இனிவரும் காலங்களில் ஈடுபட வேண்டாமெனவும் பொலிஸார் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .