2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜெயசீலன் இராஜினாமா

Editorial   / 2020 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிரவன்

திருகோணமலை, மூதூர் பிரதேச சபை உறுப்பினர் புத்திசிகாமணி ஜெயசீலன், தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமாக் கடிதத்தை, திருகோணமலை பிரதித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்துக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

மூதூர் பிரதேச சபையின் உறுப்பினராக 26 மாதங்கள் இருந்த புத்திசிகாமணி ஜெயசீலன் தான் பதவி விலகுவதாக, திருகோணமலை, சுங்க வீதியிலுள்ள மல்லிகா மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அறிவித்தார்.  

கேடயம் சுயேச்சைக் குழு சார்பில் போட்டியிட்ட இவர், தனது சுயேச்சைக் குழு தெரிவித்ததற்கு இணங்க, இரண்டு வருட கால பதவியை ஓர் உறுப்பினருக்கு வழங்கும் பொருட்டு, இப்பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--