Editorial / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்
“முஸ்லிம்களுக்கு இருக்கின்ற இரண்டு கட்சிகளை அழித்தொழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள்” என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டினார்.
கந்தளாயில் நேற்று (01) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் குற்றஞ்சாட்டினார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களும் பாரபட்சமின்றி நடத்துவோமென அறிவித்துள்ளார் என்றதுடன், ஜனாதிபதி கூறியது போன்று நடத்தினால் சரியாகுமென்றார்.
நாட்டில் முஸ்லிம் மக்களை இல்லாதொழிக்கவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனக் கூறியதுடன் “கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே நமது வேட்பாளர் தோல்லியுற்றாலும் நாம் தோற்கவில்லை” என்றார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாறு காணாத வெற்றிகளைக் கண்டுள்ளோம் என்றும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் எண்ணங்களை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
அமைதியாக வாழுகின்ற முஸ்லிம் மக்களை, பௌத்த தேரர்களை வைத்து பயம் காட்டி, இல்லாத பொல்லாத அபாண்டங்களைச் சுமத்தி வருகின்றார்கள் எனவும் நாட்டின் வளர்சிக்கும் பொருளாதாரத்துக்கும் எத்தனையோ முஸ்லிம் நாடுகளிடம் மண்டியிட்டு, பொருளாதாரத்தைப் பெற்றுக்கொடுத்தும் என்னைக் கைது செய்ய வேண்டுமென்றும் இன்று கூறி வருகின்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, அரசியல் தலைமைகளில் பிழைகள் இருந்தால், பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள் எனக் கூறிய ரிஷாட் எம்.பி, “சில பௌத்த தேரர்கள் நீதிபதிகள் போன்று செயற்படுகின்றார்கள்” என்றார்.
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025