2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

வயல்கள் வெள்ளத்தில் மூழ்கின

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா, குறிஞ்சான்கேணி ஆகிய இரு கமநல சேவைப் பிரிவுகளிலும் 700 ஏக்கருக்கும்  மேற்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக,  விவசாயிகள்  கவலை தெரிவிக்கின்றனர்.

மதுரங்குழி, சுங்கான் குழி, கல்லடிப்பு, பட்டியான் ஊத்து, வெள்ளங்குளம்  ஆகிய பிரதேச வயல் நிலங்களே, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

அதிக மழை காரணமாக, ஈச்சங்குளம் உடைப்பெடுத்தமை, சுங்கான் குழி குளம், பட்டியன்ஊத்து குளம் ஆகிய குளங்கள் பெருக்கெடுத்தமை, குரங்குபாஞ்சான்  குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டமை போன்ற காரணங்களால், இந்த வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--