2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் ஜெக்கா நிதியுதவியுடன் வீதிகள் அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாணத்தில் ஜெக்கா நிதியுதவியுடன் 320 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் புதிதாக அமைக்கப்படவுள்ளது.


மூன்று வருடங்களுக்குள்; இவ்வீதிகள் அமைக்கப்படுமென்பதுடன், முதல் கட்டமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தலா 115 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் அமைக்கும் பணிகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.  


இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட பிரதேசசபைகளின் தலைவர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட உயர்மட்ட சந்திப்பு  வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு. கிரமிய மின்சாரம், நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி, இலங்கை மின்சாரசபையின் கிழக்கு பிராந்திய பொதுமுகாமையாளர் து.தவனேஸ்வரன், திருகோணமலை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான பொறியியலாளர் எஸ்.சுகுமார,; கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான அ.பரசுராமன், என்.எம்.அன்வர், எம்.மகரூப், எம்.பரீ;ட், மற்றும் திருகோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வராசா, மற்றும் பட்டணமும் சூழலும், குச்சவெளி, தம்பலகாமம், கிண்ணியா, ஈச்சிலம்பற்று. ஹோமரன்கடவெல, மொரவேவ, பதவிசிறிபுர பிரதேசசபைகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--