Kogilavani / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் யானையினால் துரத்தப்பட்ட நிலையில் மயிரிழையில் தப்பியுள்ளார்.
புள்ளிக்குடியிருப்பு என்னும் கிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இவரை வழியில் வந்த யானை துரத்துவதற்கு ஆரம்பித்துள்ளது. மேற்படி ஆசிரியர் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு காட்டுப் பாதை வழியாக தப்பி ஓடியுள்ளார்.
பின்பு யானை மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மூதூர் வலயக் கல்வி பணிப்பாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் வரவு அதிகரித்துள்ளமை குறித்து பொலிஸ் நிலையத்திலும் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago