Suganthini Ratnam / 2015 ஜூலை 27 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம், எஸ்.சசிக்குமார், பைஷல் இஸ்மாயில்,எப்.முபாரக்
திருகோணமலை சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் இரண்டு வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கு சொந்தமான வாகனம் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வாகனம் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியமையால் பழுது பார்ப்பதற்காக வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விடப்பட்டது. இதன் மின்கலம் பழுதடைந்த நிலையில் அகற்றப்பட்டிருந்தது.
தீ பிடித்தமைக்குரிய காரணம் தெரியவரவில்லை என்று தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .