2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

15 கடை உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, மூதூர் மற்றும் சேருவில வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் 15 கடை உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூதூர், சேருவில வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பலசரக்குக் கடைகள், வெதுப்பகங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் சனிக்கிழமை (08) பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர்ச் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை வைத்திருந்தமை,  காலாவதியான உணவுப் பண்டங்களை வைத்திருந்தமை, சுகாதாரம் அற்ற முறையில் உணவுகளை தயாரித்திருந்தமை, பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு சிட்டுத்துண்டு இடப்படாமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் மிஸ்க்கீன் முஹம்மது அலியார் தெரிவித்தார்.

இவர்களை இந்த மாதம் 13ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளதாகவும் தற்போது இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .