Editorial / 2017 ஜூன் 20 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, காலி, கொக்கலயில் நேற்றுத் திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள பயிற்சி மத்திய நிலையதில், இலவச சாரதி பயிற்சி வழங்கப்பட்வுள்ளது.
ஆரம்ப தினத்திலேயே, இதற்காக சுமார் 350க்கும் மேற்பட்டோர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, மென்ரக வாகனம் மற்றும் கனரக வாகனம் ஆகிய பிரிவுகளுக்குரிய வாகன அனுமதிப்பத்திரங்களை இலவசமாக பெற்றுக்கொடுக்க, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு மேலதிகமாக வீதிச் சட்டங்கள் தொடர்பான தொழில்நுட்ப அறிவும் பெற்றுக்கொடுக்கப்படும்.
இதற்கான பயிற்சி மத்திய நிலையமே, கொக்கலயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வாகன அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ள எவரும் இங்கு பயிற்சியைப் பெற்றுக் கொள்ளலாம். தொழில்வாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு இதன்போது முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
9 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
30 Oct 2025