Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 12 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி மாவட்டம், பிட்டிகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்த இருவர் நேற்று (11) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த வேளை, வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது ஆயுதங்களும் வெடிபொருட்களும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடனடியாக பிட்டிகல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago