2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

படகில் தத்தளித்த கடற்றொழிலாளர்கள் மீட்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கடலில் விபத்துக்குள்ளாகி சுமார் 3 வாரக்காலமாக மிதந்துகொண்டிருந்த , 'தினு புதா 01' என்ற மீன்பிடிப் படகில் இருந்த 6 கடற்றொழிலாளர்களை கடற்படையினர், இன்று (09) அதிகாலை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 21ஆம் திகதி சென்ற இந்த மீன்பிடிப் படகு, 240 கடல் மைல்கள் தொலைவில் அதன் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது.

கடற்படைக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம், ஹம்பாந்தோடை துறைமுகத்துக்கு, குறித்த மீனவர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனரென, கடற்படைப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் சமிந்த வலாகுலகே தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .