2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

250 குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை

Editorial   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை, ஒலபெத்த கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட புயல் காற்று காரணமாகச் சேதமடைந்த வீடுகளுக்கு, உரிய மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என, பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

ஒலபெத்த கிராமத்தின் தட்டபொல பகுதியில் வசிக்கும் 250 குடும்பங்களுக்கு, இதுவரை மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

இது தொடர்பில், கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் ஆகியோருக்கு எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, இலங்கை மின்சார சபையின் மாத்தறை மாவட்டக் கிளையினர் தெரிவிக்கையில், வீதியோரம் உள்ள மின்கம்பங்களைத் திருத்தியமைப்பதற்குக் காலம் தேவைப்படுவதாகவும் கிரமமாக அவற்றை மீளமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .