2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'இன முறுகலைத் தோற்றுவித்தால் நடவடிக்கை'

Editorial   / 2017 மே 24 , மு.ப. 09:56 - 1     - {{hitsCtrl.values.hits}}


 சந்துன் ஏ. ஜயசேகர

நாட்டில் இன முறுகலையும் முரண்பாட்டையும் ஏற்படுத்த முயலும் தரப்புகளுக்கு எதிராக, சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு, அமைச்சரவை நேற்றுத் தீர்மானித்தது என, அரசாங்கம் நேற்றுத் தெரிவித்தது.

இதன்படி, சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவோர் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவர்கள் மீது சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்துமாறும், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், அரசாங்கம் பணிப்புரை விடுக்கவுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அமைச்சரவைப் பேச்சாளரும் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சருமான கயந்த கருணாதிலக, இவ்விடயங்களை வெளிப்படுத்தினார்.

சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமைக்கு, சில குழுக்களும் தனிநபர்களும் வெளிப்படுத்திய கருத்துகள் காரணமாக அமைந்தன என்பது தொடர்பாக, அமைச்சரவையால் கரிசனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

"நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்துச் சமூகங்களுக்கு இடையில், தீவிரப்போக்குடையோர் காணப்படுகின்றனர். இன முறுகலை ஏற்படுத்துவதற்கு, அவர்கள் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை அவர்கள், தங்களுடைய துர்நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். ஆனால், எந்தக் கட்சி அல்லது குழுவாலும் தடங்கல் ஏற்படுத்தப்படாதவாறு, ஒவ்வொரு பிரஜையும் சுதந்திரத்தைப் பெறுவதை உறுதிப்படுத்த, அரசாங்கம், அர்ப்பணிப்புடன் காணப்படுகிறது" என, அமைச்சர் கயந்த குறிப்பிட்டார்.


  Comments - 1

  • F. Car Thursday, 25 May 2017 03:33 AM

    !Ennavam Nadavadikkai, Ella Amaichcharhalum, Emazu 21 MP maarum cherndu Arikkai Viduvaze Pozume! Ellam Chufam!! !Ellorum Inputriruppazeyallamal Veronrariyen Paraparme!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X