2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 28 ஆக உயர்வு

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


UPDATE: மேலும் 6 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா வைரஸ்தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா வைரஸ்தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது.


நாட்டில் மேலும் மூவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பு, அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

13 வயதுடைய சிறுமி, 50 மற்றும் 37 வயதுடைய ஆண்கள் இருவரும் இவ்வாறு அடையாளர் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நேற்றைய தினம் வரை 18 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் இனங்காணப்பட்டுள்ளார்.

73 வயதுடைய ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .