2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Gavitha   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

மதவாச்சி நாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் வைத்தியர் உட்பட மூவர் பலியாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கப் ரக வாகனமும் வவுனியா பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த கன்டர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

புத்தளத்தில் வைத்தியராக பணியாற்றும் பெண் வைத்தியரான ரி.எம்.ஏ. சுதேசிகா மற்றும் அவருடைய கணவர் முகம்மது சபுர், அவருடைய மாமாவான வவுனியாவின் பிரபல வர்த்தகர் சப்ரின், அவருடைய மனைவி மலீனா ஆகியயோர், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கையில், இந்த விபத்து அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, வைத்தியரும் அவருடைய மாமா (வயது 58) மாமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பெண் வைத்தியருடைய கணவர், படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது  தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--