Editorial / 2017 ஜூலை 23 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}









எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உறவினர்களின் காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கண்ணீர் விட்டழுதார்.
நல்லூர் பகுதியில், சனிக்கிழைமை மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திர என்பவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலத்தை, யாழ்.போதனா வைத்தியசாலையில் பொறுப்பேற்பதற்காக, உயிரிழந்தவரின் உறவினர்கள், இன்று (23) யாழ். வந்து இருந்தனர்.
சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலை பிணவறைக்கு, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வந்திருந்தவேளை, அங்கு நின்றிருந்த நீதிபதி, உறவினர்களைக் கண்டதும் கதறி அழுதார். அத்துடன், அவர்களின் காலிலும் விழுந்தும் மன்னிப்புக் கேட்டு அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களின் மனதை உருக்கி இருந்தது.
இதன்போது நீதிபதியின் உடனிருந்த மன்னார் மாவட்ட நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் ஆகிய இருவரும் நீதிபதியை அழைத்துச் சென்றனர்.
உள்ளே சென்ற நீதிபதி, தொடர்ச்சியாக அழுதவண்ணம் இருந்தார். அத்துடன் தோள் பகுதியில் சூட்டுக்காயத்துக்கு இலக்காகி காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் தனது மற்றைய மெய்பாதுகாவரை பார்க்கச் சென்ற போதும் அவரை தழுவி தேம்பித் தேம்பி அழுததை காணக்கூடியவாறு இருந்தது.
8 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 Jan 2026