Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூலை 25 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
அரசாங்கத்தினால் வட, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பகுதியளவில் வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குச்சவெளி பிரதேச செயலகத்தில் பக்கச்சார்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, இன்று (25) காலை குச்சவெளி இரணைக்கேணி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஏ.எம்.எம்.சியாம் என்பவர், கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகுதியானவர்களுக்கு பதிலாக தகுதியற்றவர்களுக்கு இவ்வீட்டுத் திட்டத்தில் வீடுகள் வழங்கப்படுவதற்கு குச்சவெளி பிரதேச செயலகத்தினால் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .