Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 06 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
குன்றும் குழியுமாகக் காணப்படும் பண்டாரவளை - அட்டம்பிட்டிய வீதியை விரைவாக புனரமைத்துத் தருமாறு வலியுறுத்தி, பண்டாரவளை சுற்றுவட்டத்தில், இன்று(6) சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அட்டம்பிட்டியவிலிருந்து கருப்புக்கொடிகளை ஏந்தியவாறு வாகனங்களில் பேரணியாக வந்த அட்டம்பிட்டிய பகுதி மக்கள், பதுளை- கொழும்பு வீதியை மறித்து கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அட்டம்பிட்டியவிலிருந்து பண்டாரவளை வரையான சுமார் 15 கிலோமீற்றர் பாதை, ஏழு வருடங்களாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.
உரிய திட்டமிடல் இன்றி, ஆங்காங்கே புனரமைப்புப் பணிகள் இடம்பெறுவதால் இவ்வழியினூடாக பயணம் செய்யும் பயணிகள், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் என பலரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில் உயர் அதிகாரிகளிடம் பல தடவைகள் எடுத்துரைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டும் மக்கள், இவ்வீதியானது குன்றும், குழியுமாகக் காணப்படுவதால் மழைக்காலங்களில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே செல்லவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இப்போராட்டம் சுமார் 5 மணிநேரம் வரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்ட இடத்தில் குவிந்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைந்துச் செல்லுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தபோதிலும், அதனை ஏற்க மறுத்தனர்.
இதனால், பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இறுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த, குறித்த வீதியைப் புனரமைக்கும் குழுவிலுள்ள பொறியியலாளர் ஒருவர், மக்களின் கோரிக்கைகளுள் சிலவற்றை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதனையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
10 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago
35 minute ago