Editorial / 2017 ஜூன் 01 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரிப்பின் அறிவுறுத்தலுக்கமைய, பாகிஸ்தானியன் கடற்படை கப்பலான பிஎன்எஸ் சுல்பிகார் வெள்ள நிவாரணப்பொருட்களுடன் இலங்கையை வந்தடைந்தது. அதன்படி, பாகிஸ்தானிய அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களால் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை, இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, பாகிஸ்தானியக் கடற்படை மருத்துவக்குழுவின் மருத்துவ முகாம், களுத்தறை - ஹொரன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து நோயாளிகளுக்கும் வைத்தியர்களால் மருத்துவம் உட்பட அனைத்து சேவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கைக் கடற்படை தளபதி வைஸ்.அத்மிரல். சி.விஜேகுணரத்ன பாகிஸ்தானிய மருத்துவ குழுவினை சந்தித்து, அவர்களின் சேவையைப் பாராட்டினார்.
இலங்கையில் வெள்ளத்தாலும், மண்சரிவாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை மீளவும் பழைய நிலைமைக்கு கொண்டுவருதலே, பாகிஸ்தானியக் கடற்படை கப்பலின் விஜயத்தின் நோக்கமாக காணப்படுவதுடன், மீட்பு நடவடிக்கைகள் நிறைவுறும் வரையில் இக்கப்பல், இலங்கையில் தரித்திருக்கும்.
பாகிஸ்தானியக் கடற்படை வீரர்களின் அர்பணிப்புடன் கூடிய மனிதாபிமான சேவையினையும், திறமையினையும் உள்ளூர் மக்கள் பெரிதும் பாராட்டியமை குறிப்பிடதக்கது.


8 hours ago
03 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
03 Jan 2026