2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

வயலுக்குள் பாய்ந்தது...

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வெல்லாவெளி - பக்கியெல்ல வீதியின் பாலடவத்த பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று, பாதையை விட்டு விலகிச்சென்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டுப் பிரஜைகளை ஏற்றிக்கொண்டு, மட்டக்களப்பு நோக்கிப்  பயணித்துகொண்டிருந்தபோதே விபத்து சம்பவித்துள்ளது.

வாகனத்தின் சாரதி, திடீர் சுகவீனமுற்றதாலேயே விபத்து ஏற்பட்டதாகவும் அவர் தற்போது, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்த பொலிஸார், வானில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரும்,  எவ்விதமான பாதிப்புகளும் இன்றி தப்பியதாகவும் கூறினர். 

(படங்கள்: வசந்த சந்திரபால)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .