2021 மே 06, வியாழக்கிழமை

வான் பாய்ந்து விபத்து...

Kogilavani   / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

கொத்மலை, இறம்பொடை பகுதியில் வானொன்று 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் கொத்மலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து- கம்பளை நோக்கி பயணித்த வானொன்றே ஞாயிற்றுக்கிழமை இரவு(15)   பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெலிசர பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர். இவர்களில், காயமடைந்த பெண்; மேலதிக சிகிச்சைக்காக  கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .