A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
எத்தனை இழப்புக்கள், எத்தனை துன்பங்கள், அத்தனையும் தாண்டி தலைநிமிர்ந்து நிற்கிறது யாழ்ப்பாணம். சல்லடையாக துளைபோட்ட கட்டடங்கள் தளைவிட்டு எழுந்திருக்கின்றன. ஆசியாவின் பொக்கிஷமென வர்ணிக்கப்பட்ட பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட கசப்பான வடுவிலிருந்து விடுபட்டு புதுத்தோல் போர்த்தியிருப்பது மனதுக்கு மகிழ்ச்சியே…
கால்கள்தான் நாமிழந்தோம், உளத்தினை உறுதியாகவே வைத்திருக்கிறோம் என கோலூன்றி நூலகத்தினுள் கால்பதித்த வாலிபரை பார்த்தவுடன் எம்கண்ணில் நீர் சுரந்தது. எத்தனை மனவுறுதி… வடுக்களை துடைத்தெறிந்து வெற்றிப் படிக்கற்களில் கால்பதிக்கிறது யாழ். மண்.
அனைத்தின மக்களும் சகஜமாக போய்வரும் நகராக யாழ்ப்பாணம் மாறியிருக்கிறது. சந்தைகளில் வியாபாரம் செய்பவர்களும் நன்றாக சிங்களம் பேசுகிறார்கள். இல்லையேல் தெரிந்தவர்கள்போல் சமாளிக்கிறார்கள். நீண்டகாலம் கொழும்பிலிருந்து தாம் கற்ற சிங்களம் இன்று அவர்களின் வியாபாரத்திற்கு கைகொடுக்கிறது.
யாழ். நகரின் அனைத்து பகுதிகளுக்கும் பயணிகள் செல்கிறார்கள். அதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் சீராக இருப்பது கண்டு ஆச்சரியம். நம்ப முடியவில்லை. இத்தனை பஸ்கள் தரித்து நிற்கின்றனவே, அத்தனைக்கும் பயணிகள் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. சந்தேகத்தை நடத்துனர்களிடம் கேட்டோம். சிரித்தவாறே சொன்னார்கள்... 'பயணிகளின் எண்ணிக்கைக்கு இன்னமும் பஸ்கள் போதவில்லை'!
ஐரோப்பிய நாடுகளில் இருக்கின்ற சொந்தங்கள் விடுமுறையில் யாழ். மண்ணில் இருக்கிறார்கள். உடைகள் முதற்கொண்டு நடைகளும் அவர்களை அடையாளம் காட்டுகின்றன. உல்லாச நகராக யாழ்ப்பாணம் உதயமாகியிருக்கிறது. அந்த மண்ணில் நாம் கண்ட காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்… பாருங்கள், சிந்தனைகளை படரவிடுங்கள்.
Pix: Kushan Pathiraja





16 minute ago
23 minute ago
29 minute ago
1 hours ago
jaaltharmini pathmanathan Tuesday, 10 August 2010 02:58 PM
india vil thamil naaddil thamil thearijathavar palar. athu pool orukaalam jaalppaanththilum thamil thearijaamal poovathil aachsarijamillai
Reply : 0 0
jameel Wednesday, 11 August 2010 02:17 AM
புதியதோர் உலகம் செய்வோம்.
Reply : 0 0
jameel Wednesday, 11 August 2010 02:17 AM
புதியதோர் உலகம் செய்வோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
29 minute ago
1 hours ago