2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

இந்தியாவில் பராக் ஒபாமா

Super User   / 2010 நவம்பர் 06 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு மும்பை விமானநிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

பராக் ஒபாமாவும் அவரின் பாரியார் மிட்செல் ஒபாமாவும் மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் இன்று பிற்பகல் 12.50 இற்கு வந்திறங்கினர்.

அவர்களை, மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் அஷோக் சாவன், மத்திய சிறுபான்மையினர் விவகார இணை அமைச்சர் சல்மான் குர்ஷிட் ஆகியோர் வரவேற்றனர்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 10 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பராக் ஒபாமா இந்தியாவில் அறிவித்தார். 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளில் ஒன்றாக இந்தியா விளங்க முடியும் எனக் கூறிய ஒபாமா, இந்திய வர்த்தக முட்டுக்கட்டைகளை நீக்க வேண்டும் எனக் கோரினார்.

அதேவேளை, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் இரு தரப்பிற்கும் வெற்றி அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். 

--
 


  Comments - 0

  • T.RAMESH Sunday, 07 November 2010 04:36 PM

    அப்படியே நம்ம நாட்டுக்கும் வந்திட்டு போங்கோ ......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--