2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

போதைக்கு முற்றுப்புள்ளி கோரி...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போதைப்பொருளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று இன்று பிற்பகல் கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

சிறைச்சாலைக் கைதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸாரால் நேற்று சிறைக்கூடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைதிகளின் தாக்குதல்களுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

இந்நிலையிலேயே மேற்படி ஆர்ப்பாட்டம் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தின் போது போதைப் பொருளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வலியுறுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Indrarathna Balasooriya


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X