Menaka Mookandi / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
யுத்தத்தின் போது உயிரிழந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரைக் கௌரவிக்கும் வகையில் அவர்களின் குடும்பத்தினருக்கு பதக்கம் வழங்கும் 'உத்தம பூஜா நிகழ்வு' பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் புத்தளம், விஜயபா இராணுவ பயிற்சி முகாமில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது யுத்தத்தின் போது உயிரிழந்த 1,119 இராணுவத்தினர், 87 கடற்படையினர், 11 விமானப்படையினர் மற்றும் 87 பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். யுத்தத்தின் போது உயிரிழந்த முதலாவது கடற்படை வீரரான காமினி பெர்ணான்டோவை கௌரவிக்கும் வகையில் அவரது தாயாருக்கு பாதுகாப்பு செயலாளர் இதன்போது பதக்கம் வழங்கி வைத்தார்.
திருகோணமலை, குச்சவெளி பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றின் போது கடற்படை வீரரான காமினி பெர்ணான்டோ கடந்த 1985ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Hiran priyankara jayasinghe

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago