Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.சீ.அன்சார், எம்.சுக்ரி, ஜவீந்திரா)
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதம நீதியரசர் அசோக்க டி.சில்வா உள்ளிட்ட குழுவினர் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தனர்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதம நீதியரசர் அசோக்க டி.சில்வா ஆகியோர் பொத்துவில் பிரதேசத்தில் மாவட்ட நீதிமன்றக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்ததுடன், கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியில் சட்டத்தரணிகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திலும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, சம்மாந்துறையில் நீதவான் நீதிமன்றக் கட்டிடம் மற்றும் குவாசி நீதிமன்றக் கட்டிடம் என்பனவற்றினையும் இவர்கள் திறந்துவைத்தனர்.
கடந்த 25வருடங்களாக இயங்காமல் இருந்த களுவாஞ்சிகுடி சுற்றுலாத்துறை நீதவான் நீதிமன்றம் இன்று முதல் இயங்கும் வகையில் இக்குழுவினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் மசூர் மௌலானா உட்பட சட்டத்தரணிகள் பாதுகாப்பு படையினர் என பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago