2021 மே 15, சனிக்கிழமை

இறுதிக்கட்டத்தை அடைந்த கூட்டுப்பயிற்சி...

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை - இந்திய கடற்படையினருக்கு இடையிலான பாரிய கூட்டுப்பயிற்சி திருகோணமலை கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. துறைமுகம், கடல்சார், கடற் கொள்ளை முறியடிப்பு போன்ற பயிற்சிகளில் இரு நாடுகளினதும் கடற்படை அதிகாரிகள், வீரர்கள் இந்த ஐந்து நாள் பயிற்சியில் ஈடுபட்டனர். இரு நாடுகளையும் சேர்ந்த 16 போர்க்கப்பல்கள் மற்றும் படகுகள் இந்த பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் இன்று பயிற்சிகள் நிறைவுற்றுள்ளன.

இறுதி நாளான இன்றைய நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா, கடற்படைத் தளபதி உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இலங்கை கடற்படையினருடனான பயிற்சிகளை இன்றுடன் நிறைவுசெய்துகொண்ட இந்திய கடற்படையினர் நாளை சனிக்கிழமை நாடு திரும்பவிருந்த போதிலும் ஒரு நாள் முன்னதாக இன்றைய தினமே நாடு திரும்பியதாக கடற்படையின் பேச்சாளர் கோசல – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இந்நிலையில், இறுதிப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள இரு நாடுகளினதும் கடற்படையினரையும், போர்க் கப்பல்களையும், அவர்களுக்கு விமானப் படையினர் ஒத்துழைப்பு வழங்குவதையும், அதிதிகள் இப்பயிற்சிகளைக் கண்டுகளிப்பதையும் படங்களில் காணலாம். Pix By :- Pradeep Pathirana


  Comments - 0

  • cool boy Saturday, 24 September 2011 09:45 AM

    ஐயோ சிரிப்பை பார் ,சிக்னல் அட்வேர்டிசமன்ட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .