2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

சாதனையாளர் கௌரவிப்பு...

Super User   / 2013 ஜனவரி 01 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


சவூதி அரேபியாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற இலங்கை மாணவன் இன்று செவ்வாய்க்கிழமை கௌரவிக்கப்பட்டார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலிலுள்ள மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் மாணவரான ஹாபிஸ் முஹமட் றிஸ்கான் என்பவரே சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றவாராவர்.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜமாஷினாலேயே ஹாபிஸ் முஹமட் றிஸ்கான் கௌரவிக்கப்பட்டார். கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே நினைவு சின்னம் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் மாணவனின் தந்தை மற்றும் பள்ளிவாசலிலுள்ள மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெருவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்  முஹமட் றிப்தி மிஸிரியா தம்பதிகளின் மூத்த புதல்வாராவார்.

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியின் 15 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் 83 நாட்டு மாணவர்களுடன் போட்டியிட்டு,  இவர் முதலிடத்தை பெற்றுள்ளார்.
(படங்கள்: நிசால் பதுகே)


   Comments - 0

 • Risan Wednesday, 02 January 2013 03:00 AM

  அல்ஹம்துலில்லா

  Reply : 0       0

  irshan Wednesday, 02 January 2013 03:42 AM

  அல்ஹம்துலில்லாஹ்

  Reply : 0       0

  imamudeen Wednesday, 02 January 2013 06:07 AM

  எல்லாம் வல்ல இறைவன் இந்த பாலகனுக்கு எல்லாவித சௌபாக்கியத்தையும் கொடுத்து என்றும் இது போல் பேரோடும் புகழோடும் எந்த நிலையிலும் இஸ்லாமிய நெறியோடு நேர்மையாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.

  Reply : 0       0

  Riyas Thursday, 03 January 2013 05:13 AM

  மாசா அல்லஹ்

  Reply : 0       0

  abdullahfaaris Friday, 04 January 2013 04:47 AM

  allah ungalukku rahmath saivanaha punitha quran puhalmalai sooddiullathu

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .