2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

யானை உயிரிழப்பு...

Suganthini Ratnam   / 2014 மார்ச் 23 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் உள்ளைத்துக்கட்டு தாலமவெட்டை வயல்வெளியில்   யானையொன்று  உயிரிழந்து காணப்படுவதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (23) காலை மேற்படி வயல்வெளிக்குச் சென்ற   விவசாயிகள்,  யானை உயிரிழந்து கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இந்நிலையில், இது தொடர்பில் வன இலாகா  திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையெனவும் பொலிஸார் கூறினர். (கனகராசா சரவணன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .