2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மடு அன்னையின் ஆடித் திருவிழா...

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆடித் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், இறுதித் திருவிழா  இன்று  புதன்கிழமை  (02) மிகச் சிறப்பாக நடைபெற்றது.    இத்திருவிழாவில் அதிகளவான  பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது  மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றதுடன்,  திருச்சொரூப ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

சிறப்புத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை, சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசேப் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

மேலும், மன்னார் மறைமாவட்ட ஆயரால் வருடத்தில் 02 தடவைகள் வழங்கப்படும் அப்போஸ்தலிக்க ஆசீர்வாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. (படங்கள்: எஸ்.றொசேரியன் லெம்பேட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .