2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மகள் வேண்டும்...

Kanagaraj   / 2014 ஜூலை 04 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


மொஹொமட் ஆஸிக்


கடுகண்ணாவை லகமுவ பிரதேசத்தை சேர்ந்த வில்பட் தயானந்த, கண்டி தலதா வீதியில் தன்னுடைய மோட்டார் வாகனத்தை நிறுத்தி அதன் கூரையின் மீதேறி இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் கண்டி நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

கண்டி மாவட்டத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரது சகாக்கள், தன்னுடைய 25 வயதான மகளை கடந்த 29 ஆம் திகதி கடத்தி சென்றதாகவும் இது சம்பந்தமாக கடுகண்ணாவை பொலிஸில் முறைப்பாடு செய்த போதும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் அதனை எதிர்த்தே தான் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த சிரேஷ் பொலிஸ் அதிகாரியொருவர், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை காரின் கூரையிலிருந்து இறக்கி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துசென்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .