2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

விசேட போக்குவரத்து...

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

பயணிகளின் நலன் கருதி மலையகத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக 150 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ளவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பிலிருந்து மலையகத்துக்கு சென்ற மக்கள்,  இன்று மீண்டும் நகர்புறங்களை நோக்கி பயணமாகினர்.

இவர்களது நலன்கருதியே விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைவாக இ.போ.ச பஸ்கள், தனியார் பஸ்கள், விசேட ரயில்கள் என்பன சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. 

இருந்தபோதிலும் ஹட்டன் நகர பஸ் தரிப்பிடம், பயணிகளால் நிரம்பி வழிகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .