2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

306 முன்னாள் போராளிகள் விடுதலை

Super User   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 306 பேர் இன்று வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களில் 200 பெண்களும் 106 ஆண்களும் அடங்கியிருந்தனர்.

வவுனியா தமிழ் மகா வித்தியாலய கட்டிடத்திலுள்ள புனர்வாழ்வு நிலையத்தில் இன்று பிற்பகல் இது தொடர்பான வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அமைச்சின் செயலாளர் என். திசாநாயக்க மற்றும் பல இராணுவ உயரதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

--


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--