Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 151 பெண்கள் உள்ளிட்ட 393 பேர் இன்று வியாழக்கிழமை காலை உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ.குணசேகர, பிரதி அமைச்சர் விஜயமுனிசொய்ஸா, வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் கே- டி-தல்பதாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்த முன்னாள் விடுதலைப் புலி பேராளிகளுக்கு விசேட புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்கள் சமூகத்தில் இணைந்து கொள்வதற்கு விடுவிக்கப்பட்டுள்ளனர் என பிரிகேடியர் ரணசிங்க தெரிவித்தார்.
கணினிப் பயிற்சியில் தேறியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
sabreen Friday, 01 October 2010 05:44 PM
இலங்கை தமிழ் மக்களின் வாழ்கை எப்போது சகஜ நிலைக்கு வரும் என்று யார் அறிவர்?
- சாப்ரீன்
Reply : 0 0
sabreen Friday, 01 October 2010 05:45 PM
இலங்கை தமிழ் மக்களின் வாழ்கை எப்போது சகஜ நிலைக்கு வரும் என்று யார் அறிவர் - சாப்ரீன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
6 hours ago
8 hours ago