2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

அக்மலுக்குப் பதிலாக ஹரிஸ் சொஹைல்

Editorial   / 2017 மே 24 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில், இடதுகைத் துடுப்பாட்ட வீரரான ஹரிஸ் சொஹைல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.   

உடற்றகுதிச் சோதனைகளில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் குழாமில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல், இங்கிலாந்திலிருந்து பாகிஸ்தானுக்கு மீள அழைக்கப்பட்ட நிலையிலேயே, பாகிஸ்தான் குழாமில், உமர் அக்மலை, ஹரிஸ் சொஹைல் பிரதியீடு செய்யவுள்ளார்.   

எதிர்வரும் சனிக்கிழமை (27) இடம்பெறவுள்ள, பங்களாதேஷுக்கெதிரான பாகிஸ்தானின் பயிற்சிப் போட்டிக்கு முன்பதாக, பாகிஸ்தானியக் குழாமுடன் ஹரிஸ் சொஹைல் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இறுதியாக, 2015ஆம் ஆண்டு மே மாதம் லாகூரில் இடம்பெற்ற சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தானுக்காக விளையாடியிருந்த ஹரிஸ் சொஹைல், ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.   

தேசிய கிரிக்கெட் அக்கடமியில் வைத்து, இன்னோர் இடதுகை துடுப்பாட்ட வீரரான உமர் அமின், வலதுகை துடுப்பாட்ட வீரர் ஆசிப் ஸகிர் ஆகியோருடன் ஹரிஸ் சொஹைல் உயர்வாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே, தேசிய கிரிக்கெட் அக்கடமியின் பயிற்றுவிப்பாளர் அளித்த அறிக்கைகளின்படி, இன்ஸமாம்-உல்-ஹக்கால் தலைமை தாங்கப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தேர்வாளர் குழு, ஹரிஸ் சொஹலை, உமர் அக்மலின் பிரதியீடாக தெரிவு செய்துள்ளது.   

22 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள ஹரிஸ் சொஹைல், 43 என்ற சராசரியில், 774 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X