2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

அடுத்த உலகக்கிண்ண போட்டியில் இந்திய அணியை சம்பியனாக்குவதே தனது கனவு-சச்சின் டெண்டுல்கர்

Super User   / 2010 ஜூன் 17 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை சம்பியனாக்குவதே தனது கனவு என்றும் அதற்காக தனது பங்களிப்பை தொடர்ந்து செய்ய உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலாம் இடத்தில் உள்ளது. எனினும் முதல் இடம்பெறுவது என்பது கடினம் எனவே இதனை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும். எல்லா அணிகளும் முதலிடத்திற்கு வர விரும்புகின்றன. அதனால் நாங்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடி வருகிறோம் என்றார் அவர்.

மேலும், உலகக்கிண்ண போட்டிகளில்  விளையாடுவதற்காக தங்களை தயார் செய்து வருகிறோம். மும்பை இறுதிப்போட்டியில் விளையாடும் கனவு நனவாக எல்லோரும் சேர்ந்து கடின முயற்சியில் ஈடுபட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, இலங்கை மற்றும் வங்களதேஷ் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--