2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்

Super User   / 2010 ஜூன் 15 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்தியா,பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 2.30 இலங்கை தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில்  ஆரம்பமாகியது.

இத்தொடரின் முதலலாவது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் சந்திக்கக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை, இலங்கை அணியில் சிம்பாப்வே இடம்பெற்ற முத்தரப்பு தொடரில் பங்குபற்றாத இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார , மஹேல ஜயவர்த்தன, லசித் மலிங்க, முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். இதுமட்டுமின்றி சொந்த மண்ணில் விளையாடுவது இலங்கைக்கு கூடுதல் பலம்.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி நீண்டகாலமாக கிரிக்கட் போட்டிகளில் விளையாடாதிருந்த சுகையிப் அக்தர், அப்துல் ரசாக், சொயிப் மலிக் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு அக்தர் நெருக்குதலை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .