2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பேட்ஸ்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 14 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி வீராங்கனை, ஆண்டின் சிறந்த இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டி வீராங்கனை விருதுகளை, நியூசிலாந்து பெண்கள் அணியின் தலைவி சுஸி பேட்ஸ் வென்றுள்ளார். இவ்விரண்டு விருதுகளையும் ஒன்றாக பெறும் முதலாவது வீராங்கனை பேட்ஸ் ஆவார்.

2015ஆம் ஆண்டு செப்டெம்பர் 14ஆம் திகதியிலிருந்து இவ்வாண்டு செப்டெம்பர் 20ஆம் திகதி வரையான 12 மாதப் பகுதியே விருதுக்கான காலப்பகுதியாக சர்வதேச கிரிக்கெட் சபை எடுத்திருந்தது. இப்பகுதியில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், ஏழு இனிங்ஸ்களில், 94.40 என்ற சராசரியில் 472 ஓட்டங்களை பேட்ஸ் பெற்றிருந்ததுடன், எட்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், இக்காலப்பகுதியில் 42.90 சராசரியில் 429 ஓட்டங்களை பேட்ஸ் பெற்றிருந்தார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டின் பெண்கள் அணியிலும் பேட்ஸ் இடம்பெற்றுள்ளார். இவ்வணியின் தலைவியாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஸ்டபனி டெய்லர் காணப்பாடுகிறார்.

ஆண்டின் சிறந்த பெண்கள் அணி: சுஸி பேட்ஸ் (நியூசிலாந்து), றேச்சல் பிறைஸ்ட் (நியூசிலாந்து) (விக்கெட் காப்பாளர்), ஸ்மித்திரி மந்தனா (இந்தியா), ஸ்டபனி டெய்லர் (மேற்கிந்தியத் தீவுகள்) (தலைவி), மெக் லன்னிங் (அவுஸ்திரேலியா), எலைஸ் பெரி (அவுஸ்திரேலியா), ஹீதர் நைட் (இங்கிலாந்து), டெயேந்திரா டோட்டின் (மேற்கிந்தியத் தீவுகள்), சுனே லூஸ் (தென்னாபிரிக்கா), அன்யா ஷேர்ஷோபிள் (இங்கிலாந்து), லெய் கஸ்பெரேக் (நியூசிலாந்து), கிம் கர்த் (12ஆவது வீராங்கனை) (அயர்லாந்து) ‌


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .