2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 17 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடரில், கொல்கத்தா ஈடன்  கார்டன் மைதானத்தில், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற  சுப்பர் 10 சுற்றின் குழு ஒன்றுக்கான பரபரப்பான போட்டியொன்றில் இலங்கையணி வெற்றி பெற்றது.

இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டனிஸ்காய், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக அஸ்கர் ஸ்டனிஸ்காய், 47 பந்துகளில், 4, ஆறு ஓட்டங்கள், 3, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 62 ஓட்டங்களையும் சமியுல்லா ஷென்வாரி, 14 பந்துகளில், 2, ஆறு ஓட்டங்கள், 3, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 31 ஓட்டங்களைப் பெற்றார். 

பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக திசர பெரேரா மூன்று விக்கெட்டுகளையும் ரங்கன ஹேரத் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், இறுதி நேரம் வரை ஆட்டமிழக்காதிருந்த திலகரட்ன டில்ஷான், 56 பந்துகளில், 3, ஆறு ஓட்டங்கள், 8, நான்கு  ஓட்டங்கள் உள்ளடங்கலாக 83 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக மொஹம்மட் நபி, ரஷீட் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர். 

போட்டியின் நாயகனாக திலகரட்ன டில்ஷான் தெரிவானார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .