2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

ஆர்தர் எதிர் ஆஸி வீரர்கள்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 11 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர், டிசெம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுநராக இருந்த ஆர்தர், 2013ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு முன்னர், அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில், தனது முன்னாள் அணியை அவர் எதிர்கொள்ளவுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், "அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக அவர் இருந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ளூர்ப் போட்டிகளில் அவர் தனது நேரத்தைச் செலவிட்டுள்ளார். பிறிஸ்பேண் மைதானம் தொடர்பிலும் எங்கள் வீரர்கள் தொடர்பிலும், அவருக்கு அறிவு இருக்கலாம். ஆனால், அவர் பணியாற்றிய பின்ன், அவுஸ்திரேலிய அணி, ஏராளமாக மாற்றமடைந்துள்ளது. நாங்கள் இப்போது, மிகவும் நெருக்கமான வீரர்களாக உள்ளோம்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .