2021 மே 06, வியாழக்கிழமை

இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஜனவரிக்கு முன் தேர்தல்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல், அடுத்தாண்டு ஜனவரிக்குள் நடாத்தப்படுமென,  விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.

ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து உருவாகிய புதிய அரசாங்கம், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழுவைக் கலைத்ததோடு, இடைக்கால நிர்வாக சபையை நியமித்திருந்தது. எனினும் சர்வதேசக் கிரிக்கெட் சபை, அதற்கெதிரான நிலைப்பாட்டை எடுத்ததோடு, இலங்கைக்கான நிதி வழங்கலையும் இடைநிறுத்தியிருந்தது.

இந்நிலையிலேயே, புதிய நிர்வாகக் குழுவை நடாத்துவதற்கான தேர்தல், ஜனவரிக்கு முன்னர் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடைக்கால நிர்வாக சபையின் உறுப்பினராக இருந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜயந்த வர்ணவீர மீது, இலங்கை கிரிக்கெட் சபையால் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலி மைதானப் பராமரிப்பாளராகவும் பணியாற்றி வந்த இவர், இடைக்கால நிர்வாக சபையிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

எனினும், வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டொன்று சம்பந்தமான விசாரணைகளில் பங்குபெறுமாறு வர்ணவீரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அதில் அவர் கலந்து கொள்ளாததையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச கிரிக்கெட் சபை கோரியதைத் தொடர்ந்து, இவ்விசாரணை முடிவடையும் அவர் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .