Shanmugan Murugavel / 2016 மே 24 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளார்.
கடந்தாண்டு இறுதியில் காயம் காரணமாக வெளியேறிய மிற்சல் ஸ்டார்க், சத்திரசிகிச்சையின் பின்னர், டெஸ்ட் போட்டியொன்றில் பங்குபற்றும் முதற்சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
அதிக வேகமாகப் பந்துவீசும் ஆற்றலுடைய மிற்சல் ஸ்டார்க், இலங்கை அணியின் அனுபவம் குறைந்த துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. மிற்சல் ஸ்டார்க் தவிர, இறுதியாக 2014ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியொன்றில் பங்குபற்றிய சகலதுறை வீரரான மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், இத்தொடருக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் பற்றின்சன், பீற்றர் சிடில் ஆகியோருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவர்கள் சேர்க்கப்படாததோடு, நேதன் கூல்ட்டர்-நீல், ஜக்ஸன் பேர்ட் ஆகியோர் இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக, ஸ்டீபன் ஓப் கீ இணைக்கப்பட்டுள்ளார்.
3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், பல்லேகெலவில் ஜூலை 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.
குழாம்:
ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), டேவிட் வோணர், ஜக்ஸன் பேர்ட், ஜோ பேர்ண்ஸ், நேதன் கூல்ட்டர்-நீல், ஜொஷ் ஹேஸல்வூட், மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், உஸ்மான் கவாஜா, நேதன் லயன், மிற்சல் மார்ஷ், ஷோன் மார்ஷ், பீற்றர் நெவில், ஸ்டீபன் ஓப் கீ, மிற்சல் ஸ்டார்க், அடம் வோஜஸ்.
2 minute ago
52 minute ago
2 hours ago
29 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
52 minute ago
2 hours ago
29 Oct 2025